தமிழ்நாடு

அதிகரிப்பு: விளை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைப்பது...

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி,-தேவதானப்பட்டி பகுதியில் நெல், கரும்பு அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் ஆட்டுகிடை அமைத்து அவற்றின் சாணத்தால் இயற்கை உரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அதிகரித்துள்ளது. தேவதானப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், கெங்குவார்பட்டி உட்பட பல பகுதிகள் வராகநதி, மஞ்சளாறு மற்றும் வைகை ஆற்றின் கரையை ஒட்டி உள்ளன. பெரியகுளம்

தேவதானப்பட்டி,-தேவதானப்பட்டி பகுதியில் நெல், கரும்பு அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் ஆட்டுகிடை அமைத்து அவற்றின் சாணத்தால் இயற்கை உரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது அதிகரித்துள்ளது.

தேவதானப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், கெங்குவார்பட்டி உட்பட பல பகுதிகள் வராகநதி, மஞ்சளாறு மற்றும் வைகை ஆற்றின் கரையை ஒட்டி உள்ளன. பெரியகுளம் தாலுகா பகுதிகளில் நெல் மற்றும் கரும்பு, வாழை பயிர்களும் அறுவடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதி விவசாய நிலங்களில் உழவுப்பணிகள், இயற்கை உரமிடுதல் நடந்து வருகிறது. இயற்கை உரமிடுதலில் ஆட்டுக்கிடை அமைப்பதால் அவற்றின் சாணத்தால் நிலத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தேவதானப்பட்டி அழகர்சாமி கூறியதாவது: 10 ஆண்டுகளாக இயற்கை உரம், மாட்டுச்சாணம் மற்றும் ஆட்டுச்சாணம் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். ஆடுகள் கிடை ஒரு ஏக்கர் நிலத்திற்கு நான்கு நாட்கள் முதல் ஏழு நாட்கள் இருந்தாலே போதும். அதன் சாணத்தால் மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். ஒரு ஏக்கரில் 500 ஆடுகள் கொண்ட கிடை ஒரு வாரம் அமைக்க ரூ. 2000 முதல் ரூ.2500 வரை செலவாகும். கிடைக்கும் பலன் அதிகம். விளைச்சல் அமோகமாக இருக்கும், என்றார். --

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X