அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் 12 நாட்களுக்கு பின் தோண்டியெடுப்பு: மனைவி முன் பிரேத பரிசோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் 12 நாட்களுக்கு பின் தோண்டியெடுப்பு: மனைவி முன் பிரேத பரிசோதனை

Added : ஆக 08, 2021
Share
தேனி:தேனியில் கணவர் ஆபிரகாம் 54, இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி செந்தாமரை 50, கூறிய புகாரால் 12 நாட்களுக்கு பின் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.தேனி என்.ஆர்.டி., நகர் செந்தாமரை. எடமால் தெரு தனியார் பெண்கள் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர். இவரது கணவர் ஆபிரகாம். இருமகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி 2 ஆண்டுகளாக பிரிந்தனர்.

தேனி:தேனியில் கணவர் ஆபிரகாம் 54, இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி செந்தாமரை 50, கூறிய புகாரால் 12 நாட்களுக்கு பின் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தேனி என்.ஆர்.டி., நகர் செந்தாமரை. எடமால் தெரு தனியார் பெண்கள் தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர். இவரது கணவர் ஆபிரகாம். இருமகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி 2 ஆண்டுகளாக பிரிந்தனர். ஆபிரகாம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தாய் வீட்டில் வசித்தார்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் ஜூலை 26ல் ஆபிரகாம் இறந்துவிட்டார் என அவரது தங்கை, செந்தாமரைக்கு அலைபேசியில் தெரிவித்தார். உடல் தேனி அரண்மனைப்புதுார் கோட்டைப்பட்டி ரோடு சி.எஸ்.ஐ., கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செந்தமாரை போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து 12 நாட்களுக்கு பின் தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்ரே முன்னிலையில் நேற்று காலை 11:30 மணிக்கு ஆபிரகாம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. செந்தாமரை முன்னிலையில் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர் கோகுலபாண்டிய சங்கர் பிரேத பரிசோதனை செய்தார். உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. இறப்புக்கான காரணம் விரைவில் தெரியும் என போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X