தமிழ்நாடு

கடைகள் அடைக்கும் விஷயத்தில்... குழப்பம்! சிறு, குறு வர்த்தர்கள் தவியாய் தவிப்பு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடுவதில் குழப்பம் நிலவியது. சில பகுதிகளில் கடைகள் முழுமையாக மூடப்பட்டும், சில பகுதிகளில் முழுமையாக திறந்தும் காணப்பட்டது.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 ம் தேதி முதல் அத்தியாவசிய பொருள் விற்பனை தவிர்த்த கடைகள் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே இயங்க உத்தரவிடப்பட்டது. வார இறுதி நாட்களில்
 கடைகள் அடைக்கும் விஷயத்தில்... குழப்பம்! சிறு, குறு வர்த்தர்கள் தவியாய் தவிப்பு

திருப்பூர்:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடைகள் மூடுவதில் குழப்பம் நிலவியது. சில பகுதிகளில் கடைகள் முழுமையாக மூடப்பட்டும், சில பகுதிகளில் முழுமையாக திறந்தும் காணப்பட்டது.கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 ம் தேதி முதல் அத்தியாவசிய பொருள் விற்பனை தவிர்த்த கடைகள் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே இயங்க உத்தரவிடப்பட்டது.

வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூட அறிவுறுத்தப்பட்டது. இதில் பால், மருந்து, மளிகை, காய்கறி, உணவு பொருள், இறைச்சி உள்ளிட்ட கடைகளுக்கு தடையில்லை.திருப்பூர் நகரை பொறுத்தவரை இந்த அறிவிப்பு சில இடங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சில பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட கடைகள் மட்டும் செயல்படவில்லை.

வியாபாரிகள் கூறுகையில், 'திருப்பூரில், சில இடங்களில் கடைகளை மூடுவதில் குழப்பம் ஏற்பட்டது. பட்டியலில் இல்லாத பகுதியில் கூட, கடைகளை மூடுமாறு, போலீசார் கூறினர். எனவே, பாரபட்சமின்றி, மாநகராட்சி முழுவதும் மூட உத்தரவிட வேண்டும் அல்லது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஏரியா மட்டும் என்பதால், குழப்பம் நிலவுகிறது,' என்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாக தரப்பில் கூறியதாவது:மாநகராட்சி பகுதியை் பொறுத்தவரை ஏற்கனவே, 33 பகுதிகள் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு சனி, ஞாயிறு நாட்களில் அத்தியாவசிய கடைகள் தவிர்த்த பிற கடைகள் அனைத்தும் முழுமையாக மூட வேண்டும்.

இதை உரிய பகுதியில் கண்காணிப்பு குழுவினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் சனி, ஞாயிறு மூட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ரூ.25 ஆயிரம் அபராதம்திருப்பூர், குமரன் ரோட்டில் ஒரு பிரபல துணிக்கடை உள்ளது. கடையின் பக்கவாட்டு கதவு வழியாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதாக தகவல் பரவியது. வடக்கு தாசில்தார் ஜெகநாதன், வடக்கு போலீசார் நேற்று மாலை அங்கு சென்று, ஆய்வு செய்தனர். தகவல் உறுதியானதால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இது போல் செயல்பட்டால் நடவடிக்கை தீவிரமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அனுமதிக்க வேண்டும்

கடைகள் திறப்பு விவகாரத்தில் நிலவும் குழப்பம் குறித்து, காமராஜர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில தலைவர் பூமிநாதன், போலீஸ் துணை கமிஷனரிடம் அளித்த மனு:கலெக்டரின் உத்தரவிட், உணவு பொருள் கடைகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றி செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் போலீசார் ஓட்டல் மற்றும் பேக்கரிகளை மூடுமாறு வற்புறுத்தினர். பனியன் நிறுவனங்கள் இயங்கும் நிலையில் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டீ, உணவு பொருள் கிடைக்கும் வகையில், உணவு பொருள் விற்பனை கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X