பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டம் முழுதும், பசுமை செழிக்குது!

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 7ல், தாராபுரம் பகுதியில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் இது வரை ஆறு திட்டங்களின் கீழ் 10.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அன்று நட்டு வைத்த விதைகள், இன்று விருட்சமாகி, பசுமை சூழலை பரப்பி கொண்டுள்ளன.இதில், திட்டம் -7, கடந்த ஜூலை மாதம்
 மாவட்டம் முழுதும், பசுமை செழிக்குது!

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் - 7ல், தாராபுரம் பகுதியில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் இது வரை ஆறு திட்டங்களின் கீழ் 10.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அன்று நட்டு வைத்த விதைகள், இன்று விருட்சமாகி, பசுமை சூழலை பரப்பி கொண்டுள்ளன.இதில், திட்டம் -7, கடந்த ஜூலை மாதம் துவங்கியது. இதில், 2 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரம் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், நேற்று தாராபுரம் அடுத்த சென்னாக்கல்பாளையம் கிராமத்தில், வெள்ளியங்காட்டு தோட்டம் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.தோட்ட உரிமையாளர்கள் ராஜா மற்றும் பெரியநாயகி ஆகியோர் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தனர். தோட்ட பகுதியில், சந்தனம் - 250, ஈட்டி மற்றும் தேக்கு தலா - 100, கரு மருது - 50 மற்றும் செம்மரம் - 800 எண்ணிக்கையும் நடவு செய்யப்பட்டது. மொத்தம், 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டன.இத்திட்டத்தில் இணைந்து பசுமை பாதுகாக்கும் வகையில் மரக்கன்று நட்டு பராமரிக்க விரும்புவோர், திட்ட கள அலுவலரை 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X