சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் வாகனம் கவிழ்ந்தது; ஊர்க்காவல் படை வீரர் காயம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம்; நேற்று முன்தினம், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்த பின், அதிகாலை, 4:00 மணியளவில் போலீஸ் 'ஜீப்'பில் வீடு திரும்பினார்.வாகனத்தை ஊர்க்காவல் படையை சேர்ந்த முத்துபாண்டி, 27 என்பவர் ஓட்டி சென்றார். இன்ஸ்பெக்டரை காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தில் உள்ள வீட்டில் இறக்கி
 போலீஸ் வாகனம் கவிழ்ந்தது; ஊர்க்காவல் படை வீரர் காயம்

திருப்பூர்:திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம்; நேற்று முன்தினம், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்த பின், அதிகாலை, 4:00 மணியளவில் போலீஸ் 'ஜீப்'பில் வீடு திரும்பினார்.வாகனத்தை ஊர்க்காவல் படையை சேர்ந்த முத்துபாண்டி, 27 என்பவர் ஓட்டி சென்றார். இன்ஸ்பெக்டரை காங்கயம் ரோடு ராக்கியாபாளையத்தில் உள்ள வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, ஸ்டேஷனுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.காயத்ரி ஓட்டல் அருகே வளைவில் 'ஜீப்' திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் மைய தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் முத்துபாண்டி படுகாயமடைந்தார்.அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X