ஆபாச படம் எடுத்த வழக்கு: ஷில்பா கணவரின் மனு நிராகரிப்பு| Dinamalar

ஆபாச படம் எடுத்த வழக்கு: ஷில்பா கணவரின் மனு நிராகரிப்பு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (2) | |
மும்பை-ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மற்றும் அவருடைய கூட்டாளி ரயான் தோர்ப் தாக்கல் செய்த மனுக்களை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சினிமா வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக பாலிவுட்

மும்பை-ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மற்றும் அவருடைய கூட்டாளி ரயான் தோர்ப் தாக்கல் செய்த மனுக்களை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



latest tamil news



சினிமா வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பல பெண்கள் புகார் அளித்தனர்.


latest tamil news


இதையடுத்து ராஜ் குந்த்ராவும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X