பொது செய்தி

தமிழ்நாடு

எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும் 'ஸ்டார்ட் அப்'

Added : ஆக 08, 2021
Share
Advertisement
'ஸ்மால் ஸ்பார்க் கான்செப்ட்ஸ்' என்கிற ஸ்டார்ட் அப் கம்பெனி எரிபொருள் செயல்திறனை அதிகப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி நிறுவனம். அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கியதை பாராட்டி பல மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.கம்பெனியின் நிறுவனர் மயூர் பாட்டீல் ஒரு இரு சக்கர வாகன ஆர்வலராக இருந்ததால், அவரது வாகனம் கொடுத்த மோசமான மைலேஜ்

'ஸ்மால் ஸ்பார்க் கான்செப்ட்ஸ்' என்கிற ஸ்டார்ட் அப் கம்பெனி எரிபொருள் செயல்திறனை அதிகப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி நிறுவனம். அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்கியதை பாராட்டி பல மதிப்புமிக்க தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.

கம்பெனியின் நிறுவனர் மயூர் பாட்டீல் ஒரு இரு சக்கர வாகன ஆர்வலராக இருந்ததால், அவரது வாகனம் கொடுத்த மோசமான மைலேஜ் இவரை சிந்திக்க வைத்தது. எனவே, மைலேஜ் அதிகப்படுத்த, அது தொடர்பான, துறையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க விஞ்ஞானியின் நுால்களை படித்தார்.

இவரது வாகனத்தின், மைலேஜ் ஏர் பில்டரில் எதிர்மறை அயனிகளை வெளியிடும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினார்.கடந்த, 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை, 200 முதல் 300 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வாகனங்களின் எரிபொருள் செலவை குறைக்க மத்திய அரசு, சாலை வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில்,எரிபொருள் சேமிப்புமிகவும் அவசியம்.

'ஷோர்ல்' என பெயரிட்டிருக்கும் இவர்களின் மைலேஜ் ஏர் பில்டர் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க ஒன்றாக இருக்கிறது, இயக்கும் செலவில் சேமிப்பு, எளிதான மற்றும் குறைந்த பராமரிப்பு, இன்ஜின் மற்றும் 'எக்ஸாஸ்ட்'-ஐ, கார்பன் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கி.மீ., வரை மீண்டும் பயன்படுத்தலாம்.மேம்பட்ட கம்ப்பூஸ்டன், தீப்பொறி பிளக்கில் கார்பன் படிவுகள் குறைகிறது. 8 முதல் 12 கி.மீ., வரை அதிக மைலேஜ் பல்வேறு மோட்டார் சைக்கிளில் கிடைக்க உதவுகிறது.

இந்த உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏர் பில்டர் பைக்குகள், கார்கள், பஸ்கள் மற்றும் ரயில்களுக்கான மைலேஜ் அதிகரிக்க உதவுகிறது. எரிபொருள் நுகர்வு குறைந்து பெரிய பணத்தை மிச்சப்படுத்தும்.நம்பிக்கை கண்டுபிடிப்புஇஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளின் இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், புனே ஸ்டார்ட் அப் கம்பெனியின் இந்த கண்டுபிடிப்பு பெரிய நம்பிக்கையை கொடுக்கும் கண்டுபிடிப்பாக இருக்கும்.

இவர்களின் இணையதளம் http://smallsparkconcepts.com

சந்தேகங்களுக்கு:

இ-மெயில்:sethuraman.sathappan@gmail.com,

மொபைல் போன் எண்: 9820451259,

இணையதளம்:www.startupandbusinessnews.com.

- சேதுராமன் சாத்தப்பன் -

adv id
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X