சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.ஒரு கோடி மோசடி செய்த பெண் புதுக்கோட்டை போலீசில் ஒப்படைப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த பெண்ணை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த விமலா 46 என்பவர் புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் பல பகுதிகளில் உள்ள பெண்களை குறிவைத்து

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் அதிக வட்டி தருவதாக ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த பெண்ணை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த விமலா 46 என்பவர் புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் பல பகுதிகளில் உள்ள பெண்களை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி என்னிடம் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று கூறியதோடு கடன் பெற்றுத் தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வரை வசூல் செய்தும் நகைகளையும் பெண்களிடமிருந்து பெற்றுள்ளார்.

அவர் கூறியவாறு பணம் இரட்டிப்பாக்கியும் தரவில்லை கடனும் பெற்றுத்தரவில்லை. இதனால் பணம் கேட்டபோது விரைவில் தருகிறேன் என்று கூறி நாட்களை கடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தலைமறைவாகி விட்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்கு விமலா வந்ததாக அந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று காலை பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் தங்கியிருந்த வீட்டை சூழ்ந்து அவரை பிடித்து கணேஷ் நகர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண் மீது மோசடி வழக்கு இருப்பதால் அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கணேஷ் நகர் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் விமலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X