உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தே.மு.தி.க., உருவாக காரணமே, தி.மு.க., தலைவர் கருணாநிதி தான்.நடிகர் விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் அசையும், அசையா சொத்துக்களில் முதலீடு செய்தார். அதில் கோயம்பேடு ஆண்டாள் அழகர் திருமண மண்டபமும் ஒன்று.சென்னை கோயம்பேடில் மேம்பாலம் அமைப்பதற்காக அந்த மண்டபத்தின் குறிப்பிட்ட பகுதியை, தி.மு.க., அரசு இடித்தது.
'விட்டேனா பார்...' என்ற கோபத்தில் விஜயகாந்த் உருவாக்கியது தான், தே.மு.தி.க., என்ற கட்சி. இது மக்களை காக்க உருவாகவில்லை; தன் சொத்து மீது கை வைத்ததால் வந்த கோபத்தால் உருவானது.கட்சி அமைத்ததால், கொள்கையும் வெளியானது. அதில் பல நல்ல கொள்கைகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, 'ஆண்டவன் மற்றும் மக்களுடன் மட்டும் தான் கூட்டணி' என்ற அறிவிப்பு, பெரும் வரவேற்பை பெற்றது.திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தே.மு.தி.க., பார்க்கப்பட்டது என்பதும் உண்மை. அடுத்தடுத்த தேர்தல்களில், அக்கட்சிக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது.

வளர்ந்து வரும் நிலையில், தன் கொள்கையை மறந்து, அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து, சட்டசபை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் தே.மு.தி.க.,விற்கு கிடைத்தது.கட்சிக்குள் குடும்ப ஆதிக்கம் அதிகரித்தது. திராவிட கட்சிகளுக்கு மாற்று தே.மு.தி.க., அல்ல என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி விட்டது. அதனால் அக்கட்சியின் தேய்பிறை ஆரம்பமானது.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேர உள்ளதாம். இதை, தன்மானமுள்ள எந்த தே.மு.தி.க., தொண்டரும் ஏற்று கொள்ளவே மாட்டார்கள்.தி.மு.க., உடன் கூட்டணி என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி உள்ள தே.மு.தி.க.,வை காணாமல் போக செய்யும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE