பொது செய்தி

தமிழ்நாடு

நானோ தொழில் நுட்பத்தில் முதல் நானோ யூரியா அறிமுகம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஈரோடு:இந்திய உழவர் உரக்கூட்டுறவு (இப்கோ) நிறுவனம் சார்பில் திரவ வடிவிலான நானோ யூரியா உரம் ஈரோடு மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்தியூர் அடுத்த எண்ணமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய வகை யூரியாவை அறிமுகம் செய்து, மக்காசோளம் வயலில் செயல் விளக்கத்தை பார்வையிட்ட ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:இப்கோ மூலம், நானோ தொழில் நுட்பத்தில்

ஈரோடு:இந்திய உழவர் உரக்கூட்டுறவு (இப்கோ) நிறுவனம் சார்பில் திரவ வடிவிலான நானோ யூரியா உரம் ஈரோடு மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தியூர் அடுத்த எண்ணமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய வகை யூரியாவை அறிமுகம் செய்து, மக்காசோளம் வயலில் செயல் விளக்கத்தை பார்வையிட்ட ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:

இப்கோ மூலம், நானோ தொழில் நுட்பத்தில் உலகின் முதல் நானோ உரமான 'நானோ யூரியா' தயாரிக்கப்பட்டுள்ளது. யூரியா உரத்துக்கு மாற்றாக, நானோ யூரியாவை பயன்படுத்தலாம். ஒரு மூடை (45 கிலோ) யூரியாவுக்கு பதில் 240 ரூபாய் விலை உள்ள 500 மில்லி திரவமே போதுமானது. அனைத்து வகையான பயிர்களுக்கும், யூரியா மேலுரமிடுவதற்கு மாற்றாக இதனை, இலை மீது தெளிக்கலாம்.

இத்திரவம் இலை முதல் வேர் வரை சென்று பயிர்களுக்கு தழைச்சத்தை அளிக்கிறது. ஒரு லிட்டர் நீரில், 4 மி.லி., நானோ யூரியா கலந்து தெளித்தால் போதும். இதனால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்துக்கு முதல் தவணையாக, 240 லிட்டர் நானோ யூரியா வரப்பெற்று உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X