பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 130 கோடியில் அணை புனரமைப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஊட்டி:தமிழகத்தில், 130 கோடி ரூபாயில் இரண்டாம் கட்டமாக அணைகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.மாநிலத்தில், மின்வாரிய கட்டுப்பாட்டில், 38 அணைகள் உள்ளன. நீலகிரியில், 13 அணைகள் உள்ளன. அணைகள் புனரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அணைகளில் நீர் கசிவை தடுத்து கட்டமைப்பை மேம்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுத்தது.புனரமைப்பு பணிக்காக உலக வங்கி, 290 கோடி ரூபாய் நிதி அளித்தது.

ஊட்டி:தமிழகத்தில், 130 கோடி ரூபாயில் இரண்டாம் கட்டமாக அணைகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.மாநிலத்தில், மின்வாரிய கட்டுப்பாட்டில், 38 அணைகள் உள்ளன. நீலகிரியில், 13 அணைகள் உள்ளன. அணைகள் புனரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், அணைகளில் நீர் கசிவை தடுத்து கட்டமைப்பை மேம்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுத்தது.புனரமைப்பு பணிக்காக உலக வங்கி, 290 கோடி ரூபாய் நிதி அளித்தது. முதற்கட்ட பணியில், நீலகிரி, கோவை, திருநெல்வேலியில் வாரியம் கட்டுப்பாட்டில் உள்ள, 18 அணைகளில், 160 கோடி ரூபாய்க்கு பணிகள் முடிக்கப்பட்டன.அணைகள் புனரமைப்பு திட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''130 கோடி ரூபாயில் இரண்டாம் கட்டமாக 20 அணைகள் புனரமைக்கப்பட உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை உட்பட ஆறு அணைகளில் பணி நடக்க உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X