பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறில் திரண்ட சுற்றுலா பயணிகள்: திருப்பி அனுப்பிய வனத்துறையினர்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஆனைமலை;வால்பாறை செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் ஆழியாறில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, ஆழியாறு பூங்கா, கவியருவி உள்பட அனைத்து சுற்றுலா பகுதிகளும் மூடப்பட்டு, சுற்றுலா
 ஆழியாறில் திரண்ட சுற்றுலா பயணிகள்: திருப்பி அனுப்பிய வனத்துறையினர்

ஆனைமலை;வால்பாறை செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் ஆழியாறில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, வால்பாறை முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, ஆழியாறு பூங்கா, கவியருவி உள்பட அனைத்து சுற்றுலா பகுதிகளும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வால்பாறைக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று தடையை மீறி, நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வால்பாறை செல்வதற்காக வந்தனர். அவர்களின் வாகனங்களை, வனத்துறையினர் ஆழியாறு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தினர்.சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி, திருப்பி அனுப்பினர். ஆழியாறு தடுப்பணை பகுதியில், தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.இன்று, ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆழியாறு, வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X