காலில் விழுந்து கதறிய கிராம உதவியாளர்: அன்னூரில் எஸ்.பி., - டி.ஆர்.ஓ., விசாரணை

Added : ஆக 08, 2021 | |
Advertisement
அன்னுார்;கிராம உதவியாளர் ஒருவர், இளைஞர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது தொடர்பாக, எஸ்.பி., மற்றும் டி.ஆர்.ஓ., விசாரணை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வியும், கிராம உதவியாளராக முத்துசாமியும் பணியாற்றுகின்றனர்.நேற்று முன்தினம் கோபி ராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி, 35, என்பவர் பட்டா மாறுதல் வழங்க
 காலில் விழுந்து கதறிய கிராம உதவியாளர்: அன்னூரில் எஸ்.பி., - டி.ஆர்.ஓ., விசாரணை

அன்னுார்;கிராம உதவியாளர் ஒருவர், இளைஞர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது தொடர்பாக, எஸ்.பி., மற்றும் டி.ஆர்.ஓ., விசாரணை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வியும், கிராம உதவியாளராக முத்துசாமியும் பணியாற்றுகின்றனர்.நேற்று முன்தினம் கோபி ராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி, 35, என்பவர் பட்டா மாறுதல் வழங்க வேண்டும் என கோரி அலுவலகம் வந்தார். அதற்கு, உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, வி.ஏ.ஓ., கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த கோபால்சாமி வி.ஏ.ஓ.,வு டன் வாக்குவாதம் செய்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பரஸ்பரம் புகார் செய்தனர்.இந்நிலையில் கிராம உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து, 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்று கதறும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க கோவை கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் நேற்று அன்னுார் தாலுகா அலுவலகத்தில், வி.ஏ.ஓ., கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி மற்றும் கோபால்சாமியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார்.அவர் கூறுகையில், ''மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது. சம்பவம் நடந்தபோது அங்கிருந்த இன்னொரு நபரிடம் விசாரித்த பின் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.கோவை ரூரல் எஸ்.பி., செல்வ நாகரத்தினம், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், மூன்று பேரிடமும் தனித்தனியாக விசாரித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X