பொது செய்தி

இந்தியா

வருமான வரி புகார்களுக்கு மின்னஞ்சல் முகவரி வெளியீடு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-வரி செலுத்துவோர் புகார்களை தெரிவிப்பதற்காக வருமான வரித் துறை சார்பில், மூன்று மின்னஞ்சல் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 2019ல் வருமான வரித் துறையில் முகமறியா வரி மதிப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.நடைமுறைஇந்த திட்டத்தில் கணினி தன்னிச்சையாக வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை ஆய்வு செய்யும். அதில் தரப்பட்டுள்ள தகவல்களில்

புதுடில்லி-வரி செலுத்துவோர் புகார்களை தெரிவிப்பதற்காக வருமான வரித் துறை சார்பில், மூன்று மின்னஞ்சல் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 2019ல் வருமான வரித் துறையில் முகமறியா வரி மதிப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.



latest tamil news



நடைமுறைஇந்த திட்டத்தில் கணினி தன்னிச்சையாக வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை ஆய்வு செய்யும். அதில் தரப்பட்டுள்ள தகவல்களில் குளறுபடிகள் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்ய ஏதாவது ஒரு நகரில் உள்ள வருமான வரி அதிகாரிக்கு அனுப்பும். அந்த அதிகாரி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை தன்னிச்சையாக வேறு ஒரு நகரைச் சேர்ந்த வருமான வரி உயர் அதிகாரிக்கு செல்லும். இந்த நடைமுறையால் வருமான வரி தொடர்பான குறைகளுக்கு, ஒருவர் தன் வட்டார வருமான வரி அதிகாரியை நேரில் சந்திக்க தேவையில்லை.

இந்த திட்டத்தில் யாருடைய வருமான வரி கணக்கு தாக்கலை, யார் ஆய்வு செய்கின்றனர் என்பது தெரியாது. மேல்முறையீடுஇதனால் வரியை குறைத்து மதிப்பீடு செய்வது உள்ளிட்ட ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தில் வரி மதிப்பீடு தொடர்பான புகார்கள், அபராதம், மேல்முறையீடு ஆகியவற்றுக்கு மூன்று மின்னஞ்சல் முகவரிகளை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது


latest tamil news


.வரி மதிப்பீடு புகாரை samadhan.faceless.assessment@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அபராதம் தொடர்பான குறைகளுக்கு, samadhan.faceless.penalty@incometax.gov.in; மேல்முறையீட்டுக்கு, samadhan.faceless.appeal@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்ளலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
08-ஆக-202110:05:47 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN மத்திய அரசாகட்டும், மாநில அரசுகளாகட்டும் போன் செய்தால் போனையே எடுக்க மாட்டார்கள் மின்னஞ்சலில் பதில் சொல்லிவிடுவார்களா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X