சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்களிடம் பணம் பறித்த 'டுபாக்கூர்' உதவி கமிஷனர்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடியில் ஆக., 2ல் போலி உதவி கமிஷனர் சென்னையைச் சேர்ந்த விஜயன், 41 கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, மாணிக் சர்க்கார், முன்னாள் கவர்னர் கிரண்பேடி, கேரள, கர்நாடக போலீஸ் அதிகாரிகளுடன் எடுத்த போட்டோக்கள் வலைதளங்களில் பரவின.நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் மும்தாஜ், இவரை ஒரு நாள்
 பெண்களிடம் பணம் பறித்த 'டுபாக்கூர்' உதவி கமிஷனர்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடியில் ஆக., 2ல் போலி உதவி கமிஷனர் சென்னையைச் சேர்ந்த விஜயன், 41 கைது செய்யப்பட்டார். இவர் முன்னாள் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, மாணிக் சர்க்கார், முன்னாள் கவர்னர் கிரண்பேடி, கேரள, கர்நாடக போலீஸ் அதிகாரிகளுடன் எடுத்த போட்டோக்கள் வலைதளங்களில் பரவின.நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் மும்தாஜ், இவரை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதித்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர்.இதில், முகநுாலில் பெண்கள் பலரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கடனாக பெற்றதாகவும் விஜயன் தெரிவித்தார். அத்துடன் அவர் கைதான மறுநாளே, 60க்கும் மேற்பட்ட பெண்கள், அவரது முகநுால் தொடர்பை துண்டித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X