பொது செய்தி

தமிழ்நாடு

பார்த்தீனிய காட்டில் மேயும் மான்கள்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
கூடலுார்:முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமித்து வரும், பார்த்தீனியம் செடிகளால் தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், பருவ மழையை தொடர்ந்து வனப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. கோடையில் இடம் பெயர்ந்த வனவிலங்குகள் மீண்டும் முதுமலைக்கு
 பார்த்தீனிய காட்டில்  மேயும் மான்கள்

கூடலுார்:முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமித்து வரும், பார்த்தீனியம் செடிகளால் தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில், பருவ மழையை தொடர்ந்து வனப்பகுதி பசுமைக்கு மாறியுள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. கோடையில் இடம் பெயர்ந்த வனவிலங்குகள் மீண்டும் முதுமலைக்கு திரும்பியுள்ளன. வனபரப்பில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் செடிகளால் பிற தாவரங்கள், புற்களின் பரப்பளவு குறைந்து வருகிறது.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'பார்த்தீனியம் பூக்களால் வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் சுவாச நோய்கள், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மான் உட்பட தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. பூ பூக்கும் முன்பாக செடிகளை அழிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X