பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் மனமிறங்க தங்கர்பச்சான் வேண்டுதல்

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை,:'மின்சார கட்டண கொள்ளையை தடுக்க, முதல்வர் மனமிறங்க வேண்டும்' என, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில், ஒரு நாள் கூட தாமதமாகாமல் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், மின் கட்டண கணக்கெடுப்பு மட்டும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் கணக்கெடுத்திருந்தால், 16 ஆயிரம்

சென்னை,:'மின்சார கட்டண கொள்ளையை தடுக்க, முதல்வர் மனமிறங்க வேண்டும்' என, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில், ஒரு நாள் கூட தாமதமாகாமல் ஊதியம் பெறுகின்றனர். ஆனால், மின் கட்டண கணக்கெடுப்பு மட்டும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் கணக்கெடுத்திருந்தால், 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே, என் வீட்டிற்கு மின்சார கட்டணமாக செலுத்த வேண்டி வந்திருக்கும். ஆனால், கடந்த மாதத்தில், 36 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளேன்.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால், இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. தி.மு.க., தேர்தல் அறிக்கைகளில், இந்த மின்சார கட்டண கொள்ளையை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என, முதல்வர் கூறியிருந்தார்.இந்நிலையில், அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சுகிறேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே, இவ்வளவு என்றால், மற்ற குடும்ப செலவுகளை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியவில்லை.உடனடியாக, மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து, உதவ வேண்டுகிறேன்.இவ்வாறு, தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
08-ஆக-202105:48:27 IST Report Abuse
Vaiyapuri Rajendran அரசுக்கு திரை துறை பிரபலங்கள் கோரிக்கை வைத்தால் அதனை உடனே நிறைவேற்றும் போக்கு உள்ளது .. சாமானிய பொதுஜனம் முதல் அமைச்சர் அவர்களின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனுவாக அனுப்பினால் எந்த துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறோம் என்பதை அறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பது இல்லை .சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி அதன் மீது சம்பிரதாய சடங்கு போல ஒரு பதில் தெரிவிக்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல/ நிராகரிக்கப்பட்டது / அரசின் கொள்கை தொடர்பு உடையது / என்று தெரிவித்து அந்த கிரிக்கை தீர்த்த்விட்டதாக கோப்பு முடித்து வைக்கப்படுகிறது. .உரிய முறையில் ஆய்வு செய்து அவற்றை அப்படியே sammandhappattabthuraikku அனுப்பி வைப்பது சரியல்ல....தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X