பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவம்இதுவரை 13,247 பேர் பயன்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை,:''மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், இரண்டு நாட்களில், 13 ஆயிரத்து, 247 பேர் பயன் அடைந்துள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக, 38 மாவட்டத்திலும், 3,722 நீரிழிவு நோயாளிகளுக்கு, இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதேபோல, 5,816 பேருக்கு
  மக்களை தேடி மருத்துவம்இதுவரை 13,247 பேர் பயன்

சென்னை,:''மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், இரண்டு நாட்களில், 13 ஆயிரத்து, 247 பேர் பயன் அடைந்துள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக, 38 மாவட்டத்திலும், 3,722 நீரிழிவு நோயாளிகளுக்கு, இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதேபோல, 5,816 பேருக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளும், 2,768 பேருக்கு, இரண்டு நோய்களுக்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன.நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருக்கும், 426 பேருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இதை தவிர, 454 பேருக்கு, 'பிசியோதெரபி' சிகிச்சையும், 11 பேருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 13 ஆயிரத்து, 247 பேர், இரண்டு நாட்களில் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில், இந்தாண்டு இறுதிக்குள், 1 கோடி பேர் பயனடைவர். இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், எம்.எல்.ஏ., உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X