பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: நிலக்கரி இருப்பு விசாரணை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னை:நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலைய வளாகத்தில், நிலக்கரி இருப்பு தொடர்பாக, மின் வாரிய அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு சொந்தமான, வட சென்னை அனல் மின் நிலையத்தில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. அந்த மின் நிலைய வளாகத்தில், 6ம்

சென்னை:நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலைய வளாகத்தில், நிலக்கரி இருப்பு தொடர்பாக, மின் வாரிய அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு சொந்தமான, வட சென்னை அனல் மின் நிலையத்தில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. அந்த மின் நிலைய வளாகத்தில், 6ம் தேதி நிலவரப்படி, 3.68 லட்சம் டன் நிலக்கரி இருப்பதாக, மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை தரப்பட்டுள்ளது. நிஜத்தில், அதில் பாதி கூட இல்லை என, தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, நம் நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் குழு, நிலக்கரி இருப்பு தொடர்பாக, மின் நிலைய வளாகத்தில், நேற்று விசாரணை நடத்தியுள்ளது.இதுகுறித்து, வட சென்னை மின் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலக்கரி இருப்பு, உண்மையில் வளாகத்தில் உள்ள இருப்பு குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களின் அறிக்கையின் முடிவை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X