சினி பிட்ஸ் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சினி பிட்ஸ்

Added : ஆக 08, 2021
Share
பீஸ்ட்டில் இவரா : ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிநெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ள நிலையில் இப்போது இயக்குனர் செல்வராகவன் நடிகராக இணைந்துள்ளார். இவர் இந்தபடத்தில் நடிப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி

பீஸ்ட்டில் இவரா : ரசிகர்கள் இன்ப அதிர்ச்சிநெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ள நிலையில் இப்போது இயக்குனர் செல்வராகவன் நடிகராக இணைந்துள்ளார். இவர் இந்தபடத்தில் நடிப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதுடன் இப்படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. பீஸ்ட் தவிர சாணிக்காயிதம் படத்திலும் செல்வராகவன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.ராகவா லாரன்ஸ் நடிக்கும் "துர்கா""ருத்ரன்" படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், அடுத்து துரை செந்தில் குமார் இயக்கும் "அதிகாரம்" படத்தில் நடிக்கிறார். இதுதவிர சந்திரமுகி 2 படமும் கைவசம் உள்ளது. அடுத்ததாக துர்கா என்ற படத்தை லாரன்ஸ் தயாரித்து, நடிக்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள் அறிவிப்பு வெளியாகிறது. தற்போது படத்தின் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.டிஸ்சார்ஜ் ஆகியும் வீட்டுக்கு செல்லாத யாஷிகாநடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கினார். உடன் சென்ற இவரது தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் டிஸ்ஜார்ஜ் ஆகிவிட்டார். ஆனால் தனது வீட்டிற்கு செல்லவில்லை. இதுப்பற்றி யாஷிகா கூறுகையில், ‛‛மூன்று ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. வலி சற்று குறைந்துள்ளது. என் வீட்டிற்கு சென்றால் தோழி பவானியின் நியாபகம் வரும். அதனால் தான் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன்'' என்றார்.ஓடிடியில் வடிவேலுவின் புதிய அவதாரம்நடிகர் வடிவேலு வெப் தொடரில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் அல்லு அர்ஜூனின் ஆஹா ஓடிடி தளம், விரைவில் தமிழகத்தில் களமிறங்குகிறது. தமிழிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்க உள்ளது. அந்த வகையில் நடிகர் வடிவேலுவிடம் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க பேசி உள்ளனர். இதற்கு வடிவேலு சம்மதம் தெரிவித்து உள்ளதாக தகவல்.தலைகீழாக நின்று யோகா செய்யும் மாளவிகாஉன்னைத் தேடி, ஆனந்த பூங்காற்றே, வெற்றிக் கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா. திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்தவர் ஒருகட்டத்தில் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் மாளவிகா, இப்போது தலைகீழாக நின்று யோகாசனம் செய்யும் போட்டோவை வெளியிட்டு, ‛‛யோகா உள் அமைதியை கண்டறிய உதவுகிறது. இது உண்மையிலேயே மிகவும் பிரமிப்பாக உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.ஆக., 15ல் அட்லீ - ஷாருக்கான் பட அறிவிப்புவிஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ அடுத்தததாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆக.,15ல் வெளியிட உள்ளனர். சமீபத்தில் படத்திற்கான போட்டோஷூட், அறிமுக டீசருக்கான படப்பிடிப்பை ஷாரூக்கானை வைத்து எடுத்துள்ளார் அட்லீ.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X