பொது செய்தி

தமிழ்நாடு

27 சதவீதம் பேருக்கு தடுப்பூசி: கலெக்டர்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மதுரை-''மாவட்டத்தில் இதுவரை 27 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என மதுரையில் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமங்கள் அடங்கிய 10 ஊராட்சிகளுக்கு பரிசு வழங்கி கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.அவர் பேசுகையில், ''மாநிலத்தில் அதிகளவாக அரசு மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்ட இளங்கோ பள்ளியில் ஒரு லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மதுரை-''மாவட்டத்தில் இதுவரை 27 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என மதுரையில் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமங்கள் அடங்கிய 10 ஊராட்சிகளுக்கு பரிசு வழங்கி கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.அவர் பேசுகையில், ''மாநிலத்தில் அதிகளவாக அரசு மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்ட இளங்கோ பள்ளியில் ஒரு லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்'' என்றார்.ஒரு கிராமத்தில் நுாறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியதற்காக திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சி தலைவர் நர்மதா உள்ளிட்ட 10 ஊராட்சி தலைவர்கள், எழுமலை பேரூராட்சி, உசிலம்பட்டி நகராட்சியில் தலா ஒரு வார்டில் நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தியதற்காக சிறப்பு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை வரவேற்றார். பி.ஆர்.ஓ., சாலி தளபதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X