பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் 'நீட்' தேர்வு எழுத 507 மாணவர்கள் ஆர்வம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மதுரை -மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 507 மாணவர்கள் இந்தாண்டு 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.மருத்துவ படிப்பில் சேரஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சலுகையால்கடந்தாண்டு மதுரையில் 13 அரசு மாணவர்கள் மருத்துவ 'சீட்' பெற்றனர். இதனால் இந்தாண்டு இத்தேர்வு எழுத 507 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி

மதுரை -மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 507 மாணவர்கள் இந்தாண்டு 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.மருத்துவ படிப்பில் சேரஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சலுகையால்கடந்தாண்டு மதுரையில் 13 அரசு மாணவர்கள் மருத்துவ 'சீட்' பெற்றனர். இதனால் இந்தாண்டு இத்தேர்வு எழுத 507 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிப்பதுடன் கல்வித்துறைசிறப்பு கையேடுகளும் வழங்கி ஊக்குவித்து வருகிறது.சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறியதாவது: இத்தேர்வுக்கு60 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். 'இ- பாக்ஸ்' வழி நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பு வீடியோ மற்றும் வினாக்கள் குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்காக சி.இ.ஓ., பெயரில் கூடுதல்கூகுள் 'லிங்க்' பெறப்பட்டுள்ளது. தினமும் தேர்வு நடத்தி மாணவர் திறன் கண்காணிக்கப்படுகிறது. ரூ.4 லட்சம் செலவில் சிறப்பு கையேடுவழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டுஅரசு பள்ளியை சேர்ந்த50 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X