பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : ஆக 08, 2021
Share
Advertisement
* பாதுகாப்பு திட்டத்தில் 1436 நெசவாளர்கள்மதுரையில் கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில் விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹாலில் 7வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஒரு நாள் சிறப்பு கண்காட்சியை கலெக்டர் அனீஷ்சேகர் திறந்தார். அவர் பேசுகையில், ''முத்ரா திட்டத்தில் 13 நெசவாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் வங்கி கடன் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. சேமிப்பு, பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1436

* பாதுகாப்பு திட்டத்தில் 1436 நெசவாளர்கள்மதுரையில் கைத்தறி மற்றும் துணிநுால் துறை சார்பில் விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹாலில் 7வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி ஒரு நாள் சிறப்பு கண்காட்சியை கலெக்டர் அனீஷ்சேகர் திறந்தார். அவர் பேசுகையில், ''முத்ரா திட்டத்தில் 13 நெசவாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் வங்கி கடன் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. சேமிப்பு, பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1436 நெசவாளர்கள் இணைக்கப்பட்டு சேமிப்பு தொகையில் முன்பணம் வழங்கப்பட்டுள்ளது'' என்றார். கைத்தறி துறை உதவி இயக்குனர் மீனாகுமாரி, உதவி அமலாக்க அலுவலர் திருவாசகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.//* அகதிகளிடம் குறைகளை கேட்ட குழுசென்னை அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியில் வாழும் தமிழர்கள் நல ஆணையரக நேர்முக உதவியாளர்கள் பாஸ்கர், ராமதிலகம் ஆகியோர் மதுரை ஆனையூர், திருவாதவூர், உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தனர். கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கூடுதலாக குடிநீர், கூடுதல் கழிப்பிடம், செப்டிக் டேங்க் சீரமைப்பு, ரோடு உள்ளிட்ட வசதிகளை செய்யும்படி அகதிகள் முறையிட்டனர். இலங்கை தமிழர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்களை குழுவினர் விளக்கினர்.//* ரூ.25.75 லட்சத்தில் 313 வீடுகளுக்கு குடிநீர்மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கோழிக்குடி, இளமனுார், சக்கிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட தானிய கிட்டங்கி, தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடம், ரூ.15.47 லட்சத்திலான பள்ளி கூடுதல் கட்டடங்கள், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.25.75 லட்சத்தில் 313 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு ஆகியவற்றை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் சூர்யகலா, கிழக்கு ஒன்றிய தலைவர் மணிமேகலை, தாசில்தார் பாண்டி, பி.டி.ஓ.,சோனாபாய் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.//

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X