பொது செய்தி

தமிழ்நாடு

மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி., வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தல்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
மதுரை-அனைத்து வகை மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்க, வரி குறைப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசின் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: வணிக சின்னம் உள்ள அத்தியாவசிய உணவு தயாரிப்புகளுக்கும் வரி விலக்கு அளித்து, பொருட்களின் தரம் மேம்படுத்த வணிக சின்னம் பெற உற்சாகப்படுத்த வேண்டும்.

மதுரை-அனைத்து வகை மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்க, வரி குறைப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசின் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: வணிக சின்னம் உள்ள அத்தியாவசிய உணவு தயாரிப்புகளுக்கும் வரி விலக்கு அளித்து, பொருட்களின் தரம் மேம்படுத்த வணிக சின்னம் பெற உற்சாகப்படுத்த வேண்டும். எச்.எஸ்.என்,, கோடிங் அடிப்படையில் வரி விதிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., அடிப்படை கொள்கையான உள்ளீட்டு வரி வரவு வசதி இல்லாமல்எந்த பொருட்களுக்கும், சேவைக்கும் வரிகளை விதிக்க கூடாது. மதுரை மெட்ரோ ரயில், எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை - துாத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்ட பணிகளை உடனே நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மதுரையில் விரைவில் பஸ்போர்ட் அமைக்கப்பட வேண்டும். சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் புதிய முதலீடுகள் வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X