பொது செய்தி

இந்தியா

தேக்கடி சுற்றுலா மீண்டும் துவக்கம்

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேக்கடி--கோவிட் காரணமாக மூடப்பட்டிருந்த தேக்கடி சுற்றுலா தலம் மூன்று மாதத்துக்கு பின் நாளை திறக்கப்பட உள்ளது.கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்று. இங்கு யானை சவாரி, மலையேற்றம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. எப்போதும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக

தேக்கடி--கோவிட் காரணமாக மூடப்பட்டிருந்த தேக்கடி சுற்றுலா தலம் மூன்று மாதத்துக்கு பின் நாளை திறக்கப்பட உள்ளது.



latest tamil news


கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்களில் தேக்கடியும் ஒன்று. இங்கு யானை சவாரி, மலையேற்றம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. எப்போதும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக இருக்கும்.


latest tamil news



கோவிட் காரணமாக ஏப்., 27 ல் தேக்கடி சுற்றுலா தலம் மூடப்பட்டது. கேரள சுற்றுலாத்துறை, வனத்துறை சார்பில் படகு சவாரி, யானை சவாரி உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டன.தற்போது கோவிட் பாதிப்பு சற்று குறைந்து உள்ளதால் மூன்று மாதத்திற்குப்பின் நாளை முதல் தேக்கடியில் சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. படகு சவாரி உள்ளிட்ட வனப்பகுதி சுற்றுலா அனைத்தும் துவக்கப்படுகின்றன.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
08-ஆக-202117:58:13 IST Report Abuse
B. இராமச்சந்திரன் என்னது கேரளாவில் கோவிட் குறைந்துள்ளதா...1லட்சத்து 78ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்... இந்தியாவின் 50% பாதிப்பு தினமும் அங்கு புதிதாக ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது... தேக்கடியை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தில் 6ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.. ஏன் இப்படி கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்து புளுகுகின்றீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X