பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்டில் விடுபட்டவை ஏதும் உண்டா?

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
அடுத்த வாரம், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகளிடம் மீண்டும் கருத்து கேட்க, சென்னையில் இன்று(ஆக.,8) அவசர கூட்டம் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் முதல் முறையாக, வேளாண்மைக்கு என, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, கடந்த மாதம், 18ல் இருந்து, ஒரு வாரத்திற்கு துறை அதிகாரிகளும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், தமிழகம் முழுக்க
TN Budget, Agri, Agri Budget

அடுத்த வாரம், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவசாயிகளிடம் மீண்டும் கருத்து கேட்க, சென்னையில் இன்று(ஆக.,8) அவசர கூட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் முதல் முறையாக, வேளாண்மைக்கு என, தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, கடந்த மாதம், 18ல் இருந்து, ஒரு வாரத்திற்கு துறை அதிகாரிகளும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆங்காங்கே இருக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து, வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து கருத்து கேட்டனர். இந்த கருத்துக்கள் அடிப்படையில், வேளாண் பட்ஜெட்டை தயார் செய்துள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில், ஏற்கனவே நடந்த கூட்டங்களில் சிறந்த கருத்துக்களை கூறிய விவசாய சங்க பிரதிநிதிகளை, மாவட்டத்துக்கு ஒருவர் என, 38 பேரை தேர்வு செய்து, அவசரமாக சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, எழிலகம், வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில், இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தோடு, துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

அப்போது, வேளாண் மாதிரி பட்ஜெட்டை, விவசாய சங்க பிரதிநிதிகளிடம் காட்டி, அதில் விடுபட்ட விஷயங்களை சுட்டிக்காட்டுமாறு கேட்க உள்ளனர்.அவர்கள் கூறும் விஷயங்களையும், வேளாண் பட்ஜெட்டில் சேர்க்க, அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senkuttuvan AL - Madurai,இந்தியா
09-ஆக-202116:44:11 IST Report Abuse
   Senkuttuvan AL விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய மத்திய கால மற்றும் நீண்ட கால கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மீண்டும் நகைகளை வைத்து 4% வட்டியில் நகை கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
08-ஆக-202116:10:56 IST Report Abuse
Kumar முதலில் மதுரை, விருதுநகர்,ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள இடங்களில் எல்லா பகுதியிலும் பாசன வசதி செய்து தருவார்களா? இல்லை காவிரி,காவிரினு கூவ போவார்களா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
08-ஆக-202110:14:43 IST Report Abuse
venkates பா.ம்.கே வின் கோரிக்கை விவசாய பட்ஜெட்,,, நல்லது வரவேற்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X