பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவள்ளிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் கோர்ட் உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் மந்தைவெளி புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக, அதே கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.ஆக்கிரமிப்புகளை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் கோர்ட் உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

விக்கிரவாண்டி அடுத்த சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் மந்தைவெளி புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக, அதே கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டும் அகற்றப்படவில்லை. அதனையடுத்து, துரைராஜ் மீண்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதன் பேரில், நேற்று காலை சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமையில் மண்டல துணை தாசில்தார் செல்வமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி., மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X