சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம்

Added : ஆக 08, 2021
Share
விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய பீட்சா, மருந்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் நகரில் கமிஷனர் சுரேந்திரஷா தலைமையில் நகர்நல அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது, கே.கே., ரோட்டில் உள்ள பீட்சா கடையில் இருந்த குப்பைகளை மார்க்கெட் வீதியில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே கொட்டியிருந்தனர்.

விழுப்புரம் : விழுப்புரம் நகர பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்திய பீட்சா, மருந்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் நகரில் கமிஷனர் சுரேந்திரஷா தலைமையில் நகர்நல அலுவலர் பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது, கே.கே., ரோட்டில் உள்ள பீட்சா கடையில் இருந்த குப்பைகளை மார்க்கெட் வீதியில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே கொட்டியிருந்தனர். அதே போன்று, நேருஜி சாலையில் உள்ள மருந்து கடையில் இருந்த குப்பைகளை வி.மருதுார் ஏரி அருகே கொட்டியதும் தெரியவந்தது.

அதனையடுத்து, சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாக இருந்த பீட்சா கடைக்கு 5,000ரூபாயும், மருந்து கடைக்கு 10 ஆயிரம் ரூபாயும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.இதேபோன்று, விழுப்புரம் போக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையிலான போலீசார், ஜானகிபுரம் பைபாஸ் சாலையில் வாகன சோதனை செய்தனர்.அப்போது, சரக்கு வாகனத்தில் 42 பயணிகளை ஏற்றி வந்த வாகன உரிமையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அனைவரையும் இறக்கி அவர்களை அனுப்பி வைக்க மாற்று ஏற்பாடு செய்து, டிரைவரை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X