சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் சாலை மறியல்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
செஞ்சி : தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே கட்டப்படும் ஏரி வாய்க்கால் கல்வெர்ட்டை உயர்த்தி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. இதனால், சாலையின் குறுக்கே செல்லும் கல்வெர்ட்டுகள் புதிதாக கட்டப்படுகிறது.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ஏரி

செஞ்சி : தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே கட்டப்படும் ஏரி வாய்க்கால் கல்வெர்ட்டை உயர்த்தி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. இதனால், சாலையின் குறுக்கே செல்லும் கல்வெர்ட்டுகள் புதிதாக கட்டப்படுகிறது.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் ஏரி உபரி நீர் செல்லும் வாய்க்காலின் மீது கல்வெர்ட் கட்டப்படுகிறது. இங்கு, தரை மட்டத்தை விட கூடுதலாக இரண்டு அடி உயர்த்தி கட்டுகின்றனர்.

இதனால் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் சூழ்ந்து பயிர் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும் என , நேற்று மாலை 3:30 மணியளவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலம்பூண்டி கூட்ரோட்டில் மறியல் செய்தனர்.

சத்தியமங்கலம் போலீசார் விவசாயிகளிடம் பேசி அப்புறப்படுத்தினர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. அதன்பிற்கு அங்கு வந்த அமைச்சர் மஸ்தான் கல்வெர்ட் கட்டும் பணியை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X