இந்தியா

செல்லிப்பட்டு படுகையணை சேதம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
திருக்கனுார் : செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையின் நடுப்பகுதி சேதமடைந்து உடையும் அபாயத்தில் உள்ளது.புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் படுகை அணை அமைக்கப்பட்டது.இந்த ஆணையின் காரணமாக 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள்

திருக்கனுார் : செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையின் நடுப்பகுதி சேதமடைந்து உடையும் அபாயத்தில் உள்ளது.

புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906-ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் படுகை அணை அமைக்கப்பட்டது.இந்த ஆணையின் காரணமாக 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016ம் ஆண்டு பெய்த மழையின்போது, படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளத்தின் சிமென்ட் காரைகள் சேதமடைந்தன.

பொதுப்பணித் துறை நீர்பாசன பிரிவினர், தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி, சீரமைத்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் படுகையணை முழு கொள்ளளவை எட்டி, நிரம்பி வழிந்தது.அதனால், படுகையணையின் சேதமடைந்த பகுதியில் அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அணையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அணையில் சேதமடைந்த பகுதியில் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்குவதை தவிர்த்து, நிரந்தரமாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X