சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலக்கரி லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
வடலுார் : வடலுார் அருகே விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு என்.எல்.சி., நிலக்கரி லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.கடலுார் மாவட்டம் வடலுார் அருகே உள்ள பார்வதிபுரம், கருங்குழி, நயினார்குப்பம், மருவாய் உட்பட சுற்றியுள்ள கிராம விவசாயிகள் என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்கத்தில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்கின்றனர்.தற்போது

வடலுார் : வடலுார் அருகே விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு என்.எல்.சி., நிலக்கரி லாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கடலுார் மாவட்டம் வடலுார் அருகே உள்ள பார்வதிபுரம், கருங்குழி, நயினார்குப்பம், மருவாய் உட்பட சுற்றியுள்ள கிராம விவசாயிகள் என்.எல்.சி., முதல் சுரங்க விரிவாக்கத்தில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்கின்றனர்.தற்போது குறுவை பயிர் நன்கு விளைந்த நிலையில் சில நாட்களாக என்.எல்.சி., சுரங்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றவில்லை.

இதனால் நெற் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காட்டுக் கொல்லை கிராமம் அருகே முதல் சுரங்க விரிவாக்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்தி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வடலுார் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள் சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X