பொது செய்தி

இந்தியா

சபர்மதி ஆசிரமத்தை புதுப்பிக்கலாமா? காந்தியவாதிகளின் ஆதரவும் எதிர்ப்பும்!

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
குஜராத் மாநிலத்தில், மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தைப் புதுப்பித்து நவீனப்படுத்துவதற்கு, மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் மேற்கொள்ளும் முயற்சி, கடும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் சந்தித்துள்ளது.இது தொடர்பாக, 150 வரலாற்று ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:பழம்பெருமை வாய்ந்த சபர்மதி ஆசிரமத்தை, இன்றைய அரசு 54 ஏக்கர்
சபர்மதி, ஆசிரமம், காந்தியவாதிகள், ஆதரவு, எதிர்ப்பு

குஜராத் மாநிலத்தில், மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தைப் புதுப்பித்து நவீனப்படுத்துவதற்கு, மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் மேற்கொள்ளும் முயற்சி, கடும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் சந்தித்துள்ளது.

இது தொடர்பாக, 150 வரலாற்று ஆசிரியர்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

பழம்பெருமை வாய்ந்த சபர்மதி ஆசிரமத்தை, இன்றைய அரசு 54 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், புதிய அருங்காட்சியகங்களும், கலையரங்கமும், ஓய்வறைகளும், கடைகளும், உணவு கூடங்களும் கட்டப்பட உள்ளன.இது, அனைத்து காந்திய நிறுவனங்களையும் கையகப்படுத்தி, வணிக தலமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி. இதை நாம் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




தமிழகத்தை சேர்ந்த காந்தியவாதிகளின் கருத்துக்கள்:



காந்தி அமைதி நிறுவன செயலர் சூ.குழந்தைசாமி: காந்தியே இன்று இருந்தாலும், இதை வன்முறையின் வெளிப்பாடு என்று தான் கருதியிருப்பார். கருவறையின் சக்தியில் நம்பிக்கை கொள்பவர்கள், அதைக் காட்சிப் பொருளாக்க மாட்டார்கள். அதிலும் அதை ஜோடனை செய்து, லாபம் ஈட்ட முற்படவும் மாட்டார்கள்.

காந்தி கல்வி நிலையத்தை சேர்ந்த அண்ணாமலை: சபர்மதி ஆசிரமத்துக்கு வருபவர்கள் வெறும், 'டூரிஸ்ட்'கள் அல்ல. காந்திய தொண்டர்கள், ஆசிரமத்தோடு உணர்வு ரீதியாக ஒன்றியவர்கள். அப்படிப்பட்ட இடத்தை, 'டூரிஸ்ட் ஸ்பாட்' ஆக மாற்றுவதை எப்படி ஏற்க முடியும்?


சமூக நல ஆர்வலரும் காந்திய மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்பவருமான, 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன்:
தொன்மையான கோவில்களை கூட, பழைமை மாறாமல் புனருத்தாரணம் செய்கிறோம். இது, அவசியம் என்பதால் தான் பக்தர்கள் ஏற்கின்றனர். நீதிமன்றங்களும் கூட, பழமை மாறாமல் தொல்லியல் இடங்களை காப்பாற்றுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. இதையெல்லாம் பார்க்கும் போது, 100 ஆண்டுகள் பழமையான சபர்மதி ஆசிரமத்தை சீர்செய்வதில் எந்தத் தவறும் இல்லை

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-202119:23:34 IST Report Abuse
உண்மை சபர்மதி ஆசிரமத்தில் அமைப்பு மாறாமல் தலைசிறந்த கட்டிட நிபுணர்கள் ஆலோசனைகள் படி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசுகள் முதலில் காந்தீய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகளின் நிதியுதவி பெறும் காந்தீய நிறுவனங்களில் கைத்தறி ஆடைகள் அணிதல், கிராமப்புற மேம்பாட்டு பணிகள், மனித வள மேம்பாடு கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது எனும் காந்திஜியின் கூற்று மெய்ப்பிக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08-ஆக-202118:16:13 IST Report Abuse
M S RAGHUNATHAN காந்தி non violence முறையை கடைப் பிடித்து சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதை விட பெரிய காமெடி கிடையாது. உப்பு சத்தியாகிரகம் மற்றும், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் எவ்வளவு violence நிகழ்ந்தது என்று வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளவேண்டும். அரசு போராட்ட வீரர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை எவ்வளவு. இதுவும் ஒருவித வன்முறை. காந்தி, நேரு ஆகியோர் சுகமாக தனி வீடுகளில்( அரண்மனைகளில்) அனைத்து வித உதவிகளுடன் சிறை வைக்கப்பட்டனர். ஆனால் சாதாரண போராட்ட வீரர்கள் கடும் சிறை தண்டனை அனுபவித்தனர். இது வன்முறை இல்லையா ? இரத்தம் சிந்தி தான் சுதந்திரம் பெற்றோம். அஹிம்சை முறையில் அல்ல.
Rate this:
Rajas - chennai,இந்தியா
08-ஆக-202123:07:28 IST Report Abuse
Rajas/////காந்தி, நேரு ஆகியோர் சுகமாக தனி வீடுகளில்( அரண்மனைகளில்) அனைத்து வித உதவிகளுடன் சிறை வைக்கப்பட்டனர்.///// முதல்வர்கள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் பெரிய வீடுகளில் வசதியாக குடியிருக்கின்றனர். சாதாரண மக்கள் ஒட்டு வீடுகளில் துன்புறுகின்றனர். இதற்கு விடை கிடைத்தால் அதற்க்கு விடை வரும்....
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
08-ஆக-202118:07:41 IST Report Abuse
M S RAGHUNATHAN மகாத்மா காந்தியின் கொள்கைப்படி நடப்பவர்கள் சோனியா காந்தி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அவர்கள் குடும்பத்திற்கும் மகாத்மா காந்திக்கும் என்ன உறவு அல்லது சம்பந்தம் என்று விளக்குவீர்களா ? காந்தி பெயரை திருடிக் கொண்டவர்களை போற்றுவது சரியா ? காங்கிரஸ்காரர்கள் விளக்கம் அளிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X