பொது செய்தி

இந்தியா

ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி ரயில்கள் இயக்கம்: வாரியம் முடிவு

Added : ஆக 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மதுரை: மத்திய அரசு 2015 பாரீஸ் தட்பவெப்ப நிலை ஒப்பந்தப்படி பசுமை வாயு வெளியீட்டை குறைக்க தேசிய ஹைட்ரஜன் தொலைநோக்கு திட்டம், மேம்பட்ட வேதியியல் கூறு மின்கல பயன்பாடு ஆகியவற்றை பின்பற்ற முடிவு செய்துள்ளது.ரயில்வே நிர்வாகம் 2030க்குள் கார்பன் வெளியீடு இல்லாத பசுமை ரயில் போக்குவரத்தாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியன் ரயில்வே மாற்று எரிபொருள் அமைப்பு ஹைட்ரஜன்
ஹைட்ரஜன், வாயு,  ரயில்கள், வாரியம், முடிவு

மதுரை: மத்திய அரசு 2015 பாரீஸ் தட்பவெப்ப நிலை ஒப்பந்தப்படி பசுமை வாயு வெளியீட்டை குறைக்க தேசிய ஹைட்ரஜன் தொலைநோக்கு திட்டம், மேம்பட்ட வேதியியல் கூறு மின்கல பயன்பாடு ஆகியவற்றை பின்பற்ற முடிவு செய்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் 2030க்குள் கார்பன் வெளியீடு இல்லாத பசுமை ரயில் போக்குவரத்தாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியன் ரயில்வே மாற்று எரிபொருள் அமைப்பு ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி ரயில் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. இரு பக்கமும் டீசல் இன்ஜின்கள் உள்ள டெமு வகை ரயில் தொடரில், ஹரியானா மாநிலத்தில் சோனிபட் - ஜீந்த் ரயில் பாதை பிரிவில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.


latest tamil news



இதற்காக ஒப்பந்த நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆக., 17, செப்.,19ல் ஆலோசனை நடத்தவுள்ளது. பின் இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகளை செப்., 21 முதல் அக்., 5 வரை வழங்கவும் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ரயில்வே ரூ.2.3 கோடி மதிப்பில் எரிபொருள் செலவுகளை குறைக்க வாய்ப்புள்ளது. ஜெர்மனி, போலந்து நாடுகளில் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Kongu Nadu,இந்தியா
08-ஆக-202121:38:49 IST Report Abuse
Tamilan அப்படியே அந்த திருட்டு ரயில் பயணத்தையும் தடுங்களேன்......
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
08-ஆக-202117:43:29 IST Report Abuse
S. Bharani சர்வதேச அளவில் கரிய மில வாயு குறைக்கும் முயற்சியில் நம் ரயில்வே துறை பங்களிப்பு மிக அவசியம்
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
08-ஆக-202115:15:20 IST Report Abuse
visu ஹைட்ரஜன் மூலம் இயக்குவது சுற்று சூழலுக்கு சிறந்தது ஆனால் ஹைட்ரஜன் கையாள்வதில் கவனம் தேவை ரயில்கள் தனி பாதையில் செல்வதால் பெரிய சிக்கல் எது இல்லை பெட்ரோலியம் இறக்குமதி குறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X