பசுமை தீர்ப்பாயம் உத்தரவு எதிரொலி: கோவை செங்கல் சூளைகளில் ஆய்வு-

Added : ஆக 08, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, சின்ன தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் வழித்தடங்கள் அழிப்பு உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் தொடர்


பெ.நா.பாளையம் : தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி, சின்ன தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை, தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், 197 செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் வழித்தடங்கள் அழிப்பு உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் தொடர் கட்டுரை வெளியானது. இதை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், தென்மண்டல கிளை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'கலெக்டர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், புவியியல் கனிமவளத் துறையில் ஒரு மூத்த அதிகாரி கொண்ட கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும். சின்னதடாகம் வட்டாரத்தில் மண் எடுக்க அனுமதி உள்ளதா, விதிமீறி மண் எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும்'என, தெரிவிக்கப்பட்டது.

நேற்று சின்ன தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அதிகாரி தொல்காப்பியம், இயற்கை வளங்கள், கனிம வளங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்தார்.இவருடன், பல்வேறு துறை அதிகாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் செம்மண் தோண்டி எடுக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு, விவசாயம் எங்கு நடக்கிறது எனவும் கேட்டறிந்தனர்.

கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் கூறுகையில், ''அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்த உள்ளனர். இப்பணி மேலும் சில நாட்கள் நடக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X