ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு எவ்வளவு? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு எவ்வளவு?

Added : ஆக 08, 2021
Share
சென்னை : 'கடந்த நிதியாண்டில், 49 ஆயிரத்து, 384 கோடி ரூபாய்க்கு, ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இதில், 12 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது' என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச்செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வைகோ, 'மூன்று ஆண்டுகளில், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு எவ்வளவு; ஆண்டு வாரியாக கணக்கு தருக. முற்றிலும் கணினி


சென்னை : 'கடந்த நிதியாண்டில், 49 ஆயிரத்து, 384 கோடி ரூபாய்க்கு, ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இதில், 12 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது' என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க., பொதுச்செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வைகோ, 'மூன்று ஆண்டுகளில், ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு எவ்வளவு; ஆண்டு வாரியாக கணக்கு தருக. முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட பின்னும், இத்தகைய வரி ஏய்ப்பிற்கான காரணங்கள் என்ன?' என்று, மத்திய நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த விளக்கம்:

கடந்த, 2019 - 20ம் ஆண்டு, 10 ஆயிரத்து, 657 முறைகேடுகளில், 40 ஆயிரத்து, 853 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்தது. இதில், 18 ஆயிரத்து, 464 கோடி ரூபாய் திரும்ப கிடைத்தது. கடந்த நிதியாண்டில், 12 ஆயிரத்து, 596 முறைகேடுகளில், 49 ஆயிரத்து, 384 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்தது. இதில், 12 ஆயிரத்து, 235 கோடி ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஜூன், 21 வரை, 1,580 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதன் மொத்தத் தொகை, 7,421.27 கோடி ரூபாய். இதில், 1,920 கோடி ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது.ஜி.எஸ்.டி., வரி கணக்குகள் முழுமையும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. வரி செலுத்துவோர், சட்டம் மற்றும் நடைமுறை தேவைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.

ஆயினும் கூட வரி செலுத்துவோர், மின்னணு தளங்களில் கூட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.பதிவு செய்யும் போது, பொய் சான்று ஆவணங்களைத் தருகின்றனர். உண்மைத் தகவல்களை மறைத்து விடுகின்றனர். வரிச் சலுகைப் பெற, விலைப் பட்டியலை உயர்த்தி விடுகின்றனர். பொருள்களின் தர வகைப்பாடுகளை தவறாக தருகின்றனர்.தெரிந்தே வரி ஏய்ப்பு செய்வோரும் உண்டு. சில வேளைகளில் பிழைகள் நேர்வதும் உண்டு. ஆனால், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் கணினிகளில் கோளாறு எதுவும் இல்லை.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X