பொது செய்தி

இந்தியா

ஏழை குழந்தைகளின் கல்விக்கு காலணி சுத்தம் செய்யும் பேராசிரியர்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி, உணவுக்காக, பேராசிரியர் ஒருவர், பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் செல்வக்குமார்; தனியார் கல்லுாரி உதவிப் பேராசிரியர். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி நடத்தி வருகிறார்.இங்கு, தற்போது 217 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 80 மாணவர்களுக்கு மதிய
 ஏழை குழந்தைகளின் கல்விக்கு காலணி சுத்தம் செய்யும் பேராசிரியர்

புதுச்சேரி : ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி, உணவுக்காக, பேராசிரியர் ஒருவர், பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.

சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்தவர் செல்வக்குமார்; தனியார் கல்லுாரி உதவிப் பேராசிரியர். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி நடத்தி வருகிறார்.இங்கு, தற்போது 217 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 80 மாணவர்களுக்கு மதிய உணவுடன், கல்வி வழங்கி வருகிறார். இதற்கு நிதி தேவைப்பட்டாலும், யாரிடமும் உதவி கேட்பதில்லை.

விடுமுறை நாட்களில், பேராசிரியர் செல்வகுமார் பல்வேறு ஊர்களுக்கு சென்று, பொதுஇடத்தில் அமர்ந்து, பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்கிறார்.அவர்கள் விரும்பி வழங்கும் பணத்தை, ஏழை மாணவர்களின் கல்வி, உணவிற்காக செலவிட்டு வருகிறார். மேலும், தான் எழுதியுள்ள 59 புத்தகங்களை விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தையும் மாணவர்களுக்கு செலவிடுகிறார்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதி திரட்ட, பேராசிரியர் செல்வக்குமார் நேற்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில், பொது மக்களின் காலணியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X