சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல் அறுவடை இயந்திரம் திருடியவர் கிணற்றில் விழுந்ததால் சிக்கினார்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
விழுப்புரம் : அரகண்டநல்லுார் அருகே நெல் அறுவடை இயந்திரத்தை திருடிச் சென்றபோது, கிணற்றில் விழுந்து சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த எஸ்.கொள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 56; விவசாயி. இவர் தனது நெல் அறுவடை இயந்திரத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு சத்தம் கேட்டு, நாகராஜ் வெளியே
 நெல் அறுவடை இயந்திரம் திருடியவர் கிணற்றில் விழுந்ததால் சிக்கினார்


விழுப்புரம் : அரகண்டநல்லுார் அருகே நெல் அறுவடை இயந்திரத்தை திருடிச் சென்றபோது, கிணற்றில் விழுந்து சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த எஸ்.கொள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 56; விவசாயி. இவர் தனது நெல் அறுவடை இயந்திரத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு சத்தம் கேட்டு, நாகராஜ் வெளியே வந்து பார்த்தார். அப்போது, நெல் அறுவடை இயந்திரத்தை மர்ம நபர் ஓட்டிச் செல்வது தெரியவந்தது.உடன், அப்பகுதியைச் சேர்ந்தவர்களோடு அந்த நபரை பிடிக்கச் சென்றார்.

அப்போது சிறிது துாரத்தில், திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் தடுப்பு சுவரில் மோதியபடி இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்தது.அருகில் சென்று பார்த்தபோது இயந்திரத்தை ஓட்டிச் சென்ற நபர் கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்தது தெரியவந்தது.

அரகண்டநல்லுார் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவரை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், திருக்கோவிலுார் அடுத்த சுந்தரேசபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் குப்புராஜ், 23; என்பது தெரியவந்தது. வாகனத்தை திருடி வந்தபோது கிணற்றில் மோதி, தலைக்குப்புற கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X