பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 08, 2021 | Added : ஆக 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக
மழை, சென்னை வானிலை மையம், மாவட்டங்கள்,

சென்னை: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில்


இன்றும்(ஆக.8), நாளையும்(ஆக.9)


நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். மாநகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச தஞ்சாவூரில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை



வங்க கடல் பகுதிகள்


ஆக.8 மற்றும் ஆக.9 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
ஆக.8 முதல் ஆக.10 வரை தென்கிழக்கு இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்

ஆக.8 முதல் ஆக.12 வரை தேதியில் தென்மெற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், இடைஇடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்டுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
08-ஆக-202114:45:16 IST Report Abuse
SUBBU அடியே மருமகளே சுப்பம்மா இவிங்க வானிலை செய்தி சொல்லிட்டாங்கெ. போ போயி தைரியமா நம்ம மச்சுல துணிய விரிச்சு போட்டு அந்த கூழ் வடகத்தை இடியாப்ப உரல்ல புழிஞ்சு காயப் போடு.அப்டியே ஈரமா இருக்க அந்த சீனிவரக்கா வத்தலையும் காயப் போடு.ரெண்டு நாளக்கி நல்லா காயட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X