பொது செய்தி

தமிழ்நாடு

சென்னிமலை கோவிலில் கூடுதல் ஆணையர் ஆய்வு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கூடுதல் ஆணையர் ஆய்வு நடத்தினார். சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில், 57 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான மண்டபம், பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் மலைப்பாதை தார்ச்சாலை புதுப்பித்தல், குழாய் பதித்தல், கான்கிரீட் போடும் பணி, 3.35 கோடி ரூபாய் மதிப்பிலும், மலைப்பாதையில் பேரியர் வைத்தல், பாதுகாப்பு பணி, 3.60 கோடி

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கூடுதல் ஆணையர் ஆய்வு நடத்தினார். சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில், 57 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான மண்டபம், பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் மலைப்பாதை தார்ச்சாலை புதுப்பித்தல், குழாய் பதித்தல், கான்கிரீட் போடும் பணி, 3.35 கோடி ரூபாய் மதிப்பிலும், மலைப்பாதையில் பேரியர் வைத்தல், பாதுகாப்பு பணி, 3.60 கோடி ரூபாய் மதிப்பிலும் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. மலைக்கோவிலில் புதிதாக வணிக வளாக கடைகள், 52.50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், அடிவாரத்தில் முடி காணிக்கை மண்டபம், 29.50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கோவில் தெப்பக்குளத்தை சுற்றி, 4.65 லட்சம் ரூபாய் மதிப்பில் கம்பி வேலி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை முள் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க, 10.10 லட்சம் ரூபாய் மதிப்பிலும் விரைவில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. ராஜகோபுரத்தின் வடபுறம் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஒப்புதல் வழங்கவும், கோவிலின் மற்ற பணிகளையும், ஹிந்து சமய அறநிலை துறை கூடுதல் ஆணையர் கண்ணன், நேற்று ஆய்வு செய்தார். அவருடன், இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் அன்னக்கொடி, செயல் அலுவலர் அருள்குமார் உட்பட பலர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X