பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு தி.மு.க.,வினர் அஞ்சலி

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஈரோடு: முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்றாமாண்டு நினைவு தினத்தையொட்டி, ஈரோடு பி.எஸ்.பார்க்கில் உள்ள அவரது சிலைக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநில நிர்வாக செயலாளர் சச்சிதானந்தம், குமார் முருகேசன், செல்ல

ஈரோடு: முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்றாமாண்டு நினைவு தினத்தையொட்டி, ஈரோடு பி.எஸ்.பார்க்கில் உள்ள அவரது சிலைக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநில நிர்வாக செயலாளர் சச்சிதானந்தம், குமார் முருகேசன், செல்ல பொன்னி உட்பட பலர் பங்கேற்றனர்.

*மொடக்குறிச்சி, விளக்கேத்தி, காட்டுபுதூர் நால்ரோட்டில், தி.மு.க., நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர், அஞ்சலி செலுத்தினர்.


* சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன், சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபு, நகர செயலாளர் ராமசாமி தலைமையில், கருணாநிதி உருவப்படத்துக்கு, மரியாதை செலுத்தினர். வெள்ளோட்டில், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.


*கோபி பஸ் ஸ்டாண்ட் எதிரே, நகர செயலாளர் நாகராஜ் தலைமையில், கருணாநிதி உருவப்படத்துக்கு, தி.மு.க.,வினர், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


* பெருந்துறை, குன்னத்தூர் நால் ரோட்டில், கருணாநிதி உருவப்படத்துக்கு, வெங்கடாசலம் தலைமையில், அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X