தலைவர், து.தலைவர் மீது உறுப்பினர்கள் புகார்; கொத்தமங்கலம் பஞ்.,ல் பரபரப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர், து.தலைவர் மீது உறுப்பினர்கள் புகார்; கொத்தமங்கலம் பஞ்.,ல் பரபரப்பு

Added : ஆக 08, 2021
Share
ஈரோடு: பவானிசாகர் யூனியன் கொத்தமங்கலம் பஞ்., உறுப்பினர்கள் இந்திராணி, கிருஷ்ணவேணி, தங்கமணி, சேசுராஜ், கோகிலா, குமார் உட்பட பலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர்.மனுவில் கூறியிருப்பதாவது: பஞ்., தலைவராக மல்லிகா, துணை தலைவராக சண்முகம் என்ற செல்வம் பொறுப்பு வகிக்கின்றனர். பதவியேற்ற நாள் முதல், குடிநீர் குழாய் பதித்தல், பழுது பார்த்தல், ஆழ்துளை கிணறு மின்

ஈரோடு: பவானிசாகர் யூனியன் கொத்தமங்கலம் பஞ்., உறுப்பினர்கள் இந்திராணி, கிருஷ்ணவேணி, தங்கமணி, சேசுராஜ், கோகிலா, குமார் உட்பட பலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர்.


மனுவில் கூறியிருப்பதாவது: பஞ்., தலைவராக மல்லிகா, துணை தலைவராக சண்முகம் என்ற செல்வம் பொறுப்பு வகிக்கின்றனர். பதவியேற்ற நாள் முதல், குடிநீர் குழாய் பதித்தல், பழுது பார்த்தல், ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுது பார்த்தல், சாக்கடை சீரமைத்தல், சுடுகாடு சுத்தம் செய்தல், பிளீச்சிங் பவுடர் வாங்கியது, நிர்வாக செலவு என பல்வேறு செலவுகளில் முறைகேடு செய்துள்ளனர். மேலும் பணிகளில் பாரபட்சம் காட்டுவதால், பல பகுதி மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். குடிநீர் இணைப்பை தலைவர் மற்றும் துணை தலைவர் வார்டுக்கு மட்டும் வழங்கிவிட்டு, மற்ற பகுதியை முற்றிலும் புறக்கணித்துள்ளனர். இதுபற்றி கேட்டால் உறுப்பினர்களை மட்டுமின்றி, மக்களையும் மிரட்டுகின்றனர். செயல் அலுவலர், பஞ்சாயத்துக்கள் உதவி இயக்குனர் என பலரிடம் புகார் செய்தும் பலனில்லை. கலெக்டர் நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X