பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் கனமழை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
ஈரோடு: மாநகரில் நேற்று ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி, மக்கள், வாகன ஓட்டிகள் தவித்தனர். ஈரோடு மாநகரில் நேற்று மாலை, 4:00 மணிக்கு லேசாக தொடங்கிய மழை, இடி-மின்னலுடன் கன மழையாக மாறியது. ஒரு மணி நேரத்துக்கு கொட்டி தீர்த்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளான ஆர்.கே.வி.ரோடு, கொங்காலம்மன் கோவில் வீதி, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு,

ஈரோடு: மாநகரில் நேற்று ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி, மக்கள், வாகன ஓட்டிகள் தவித்தனர். ஈரோடு மாநகரில் நேற்று மாலை, 4:00 மணிக்கு லேசாக தொடங்கிய மழை, இடி-மின்னலுடன் கன மழையாக மாறியது. ஒரு மணி நேரத்துக்கு கொட்டி தீர்த்தது. இதனால் மாநகரின் தாழ்வான பகுதிகளான ஆர்.கே.வி.ரோடு, கொங்காலம்மன் கோவில் வீதி, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், காந்திஜி சாலை, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்தது. சில பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடக்கிறது. அங்கு மழை நீர் தேங்கி, சேறு, சகதியாக மாறியது. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதேபோல் மாவட்டத்திலும், பெருந்துறை, புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, மொடச்சூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் மானாவாரி பயிர்கள், நன்கு செழித்து வளரும் என்று, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X