பொது செய்தி

தமிழ்நாடு

குறிச்சி சைபனில் அடைப்பு நீக்கம்; வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

Added : ஆக 08, 2021
Share
Advertisement
அம்மாபேட்டை: அடைப்பு நீக்கப்பட்ட நிலையில், குறிச்சி சைபனில் இருந்து வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, வலது மற்றும் இடதுகரை வாய்க்காலில், கடந்த, 1ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பவானி அருகே குறிச்சி பகுதியில், 600 மீட்டர் தொலைவுக்கு சைபனில் (சுரங்க வழி நீர்ப்பாதை) செல்கிறது. இதில், 3ம் தேதி, இரவு அடைப்பு ஏற்பட்டு,

அம்மாபேட்டை: அடைப்பு நீக்கப்பட்ட நிலையில், குறிச்சி சைபனில் இருந்து வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, வலது மற்றும் இடதுகரை வாய்க்காலில், கடந்த, 1ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பவானி அருகே குறிச்சி பகுதியில், 600 மீட்டர் தொலைவுக்கு சைபனில் (சுரங்க வழி நீர்ப்பாதை) செல்கிறது. இதில், 3ம் தேதி, இரவு அடைப்பு ஏற்பட்டு, வாய்க்காலின் கரை மேவிச் சென்றது. பொதுப்பணித்துறையினர் அவசர மதகு வழியாக தண்ணீர் திறந்து, நீரின் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதையடுத்து அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில், 20க்கு மேற்பட்ட ஊழியர்கள், இரு ராட்சத இயந்திரங்களுடன், இரவு பகலாக ஈடுபட்டனர். கற்கள், மதுபாட்டில், பிளாஸ்டிக் பொருள், வேளாண் கழிவுகளை அகற்றினர். முழுமையாக நேற்று அகற்றி முடித்தனர். இதையடுத்து வலது கரை வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X