சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் குடிசை நாசம்; பணம் முதல் பட்டா வரை சேதம்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம், பெரியார் நகரை சேர்ந்தவர் பெருமாள், 42, விவசாய கூலி தொழிலாளி. மனைவி சரோஜினி, மகன், மகளுடன் தனக்கு சொந்தமான இடத்தில் தகரத்தால் வேய்ந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர், வீட்டுக்கு வெளியே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின் பகுதியில் திடீரென தீப்பிடித்து

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம், பெரியார் நகரை சேர்ந்தவர் பெருமாள், 42, விவசாய கூலி தொழிலாளி. மனைவி சரோஜினி, மகன், மகளுடன் தனக்கு சொந்தமான இடத்தில் தகரத்தால் வேய்ந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர், வீட்டுக்கு வெளியே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் பரவியது. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தீயில் ஒரு பவுன் நகை, 28 ஆயிரம் ரூபாய், 20 மூட்டை நெல், வீட்டுமனைப்பட்டா, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து விட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சத்தி தாசில்தார் ரவிசங்கர், சேர்மன் இளங்கோ, பஞ்., தலைவர் முருகேசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X