மலைப்பாதையை எம்.எல்.ஏ.,ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதையை எம்.எல்.ஏ.,ஆய்வு

Added : ஆக 08, 2021
Share
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் சாலையை ஆய்வு செய்த தர்மபுரி, பா.ம.க.,-எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் கூறியதாவது: தொப்பூர் மலைப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் கட்டமேடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலுள்ள வளைவான, தாழ்வான சாலையால் அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன், உயிரிழப்பு தொடர்கிறது. தொப்பூர். மலைப்பாதையை சீரமைக்க, மத்திய அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து, 393 கோடி ரூபாய்

தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் சாலையை ஆய்வு செய்த தர்மபுரி, பா.ம.க.,-எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் கூறியதாவது: தொப்பூர் மலைப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் கட்டமேடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலுள்ள வளைவான, தாழ்வான சாலையால் அடிக்கடி விபத்தில் சிக்குவதுடன், உயிரிழப்பு தொடர்கிறது. தொப்பூர். மலைப்பாதையை சீரமைக்க, மத்திய அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து, 393 கோடி ரூபாய் செலவில் வளைவான பாதையை நேரான பாதையாக மாற்ற திட்டம் தயாரித்துள்ளனர். இப்பணியை விரைந்து துவங்க வலியுறுத்தி, சென்னையிலுள்ள அலுவலர்கள் மற்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து வலியுறுத்துவேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X