பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : ஆக 08, 2021
Share
Advertisement
தர்மபுரி: காரிமங்கலம் யூனியனில் கடந்த, 2018-2019ல் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 5 பயனாளிகளின் பணத்தை வேறு நபர்களுக்கு வழங்கி முறைகேடு நடந்தததாக, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் கிடைத்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பி.டி.ஓ., வடிவேல், ஏ.பி.டி.ஓ.,க்கள் சம்பத், தனலட்சுமி, ஏ.இ., இளவேணி, பணி மேற்பார்வையாளர் செல்வம், முக்குளம் பஞ்., செயலாளர் சரவணன் ஆகியோர் மீது

தர்மபுரி: காரிமங்கலம் யூனியனில் கடந்த, 2018-2019ல் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 5 பயனாளிகளின் பணத்தை வேறு நபர்களுக்கு வழங்கி முறைகேடு நடந்தததாக, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் கிடைத்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பி.டி.ஓ., வடிவேல், ஏ.பி.டி.ஓ.,க்கள் சம்பத், தனலட்சுமி, ஏ.இ., இளவேணி, பணி மேற்பார்வையாளர் செல்வம், முக்குளம் பஞ்., செயலாளர் சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று செந்தில் நகரிலுள்ள, பி.டி.ஓ., வடிவேல் வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார், மூன்று மணி நேரம் சோதனை நடந்தது. வடிவேல் தற்போது, பென்னாகரம், பி.டி.ஓ.,வாக பணியாற்றி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X