தர்மபுரி: கொலை மிரட்டல் விடும், எஸ்.எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது தங்கை தனபாக்கியம், தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில், தன் குடும்பத்தினருடன் சென்று மனு கொடுத்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: பென்னாகரம் அடுத்த அஜ்ஜனஹள்ளியில் வசிக்கிறேன். என் கணவர் இறந்து விட்டார். என் மகன் பெங்களூருவில் கூலிவேலை செய்கிறார். என்னுடன், மூன்று ஆண்கள், நான்கு பெண்கள் பிறந்தனர். என் பெற்றோரிடம், 40 ஏக்கர் நிலம் இருந்தது. இதில், என் பெற்றோருக்கு, ஐந்து ஏக்கர் நிலத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள நிலத்தை, மூன்று அண்ணன்களும் பிரித்து கொண்டனர். இதில், 1.80 ஏக்கர் நிலத்தை என் சகோதரிகள் கோகுல்காந்தி, அலமேலுக்கு செல்லாத வகையில், ஒரு போலியான தானசெட்டில்மென்ட் பத்திரம் செய்து கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 3 ஏக்கரை, எனக்கும், இதர இரு சகோதரிகளுக்கும் பிரித்து தரும்படி பென்னாகரத்தில் எஸ்.பி., சி.ஐ.டி., பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றும் என் அண்ணன் சென்றய பெருமாளிடம் கேட்டபோது தர மறுத்தார். இது தொடர்பாக நாங்கள் வழக்கு தொடுக்க முடிவு செய்ததை அறிந்து எனக்கு, கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பூர்வீக சொத்தில் எங்களுக்கு சேர வேண்டிய பங்கை பெற்று தர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE