லாரிகள் மோதல்; டிரைவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரிகள் மோதல்; டிரைவர் பலி

Added : ஆக 08, 2021
Share
தொப்பூர்: ஆந்திராவில் இருந்து இரும்பு குழாய்கள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலம் நோக்கி சென்றது. மயிலாடுதுறை அடுத்த ஆத்துக்குடி மாதாகோயில் தெருவை சேர்ந்த புஷ்பராஜ், 32, ஓட்டினார். உடன், லாரியின் உரிமையாளரும், மாற்று டிரைவருமான அதே பகுதியை சேர்ந்த குரோமிக், 40, சூசைராஜ், 30, உடன்சென்றனர். நேற்று முன் தினம் இரவு தொப்பூர் கணவாய் அடுத்த ஆஞ்சநேயர் கோவில் அருகே லாரி சென்றபோது,

தொப்பூர்: ஆந்திராவில் இருந்து இரும்பு குழாய்கள் பாரம் ஏற்றிய லாரி ஒன்று சேலம் நோக்கி சென்றது. மயிலாடுதுறை அடுத்த ஆத்துக்குடி மாதாகோயில் தெருவை சேர்ந்த புஷ்பராஜ், 32, ஓட்டினார். உடன், லாரியின் உரிமையாளரும், மாற்று டிரைவருமான அதே பகுதியை சேர்ந்த குரோமிக், 40, சூசைராஜ், 30, உடன்சென்றனர். நேற்று முன் தினம் இரவு தொப்பூர் கணவாய் அடுத்த ஆஞ்சநேயர் கோவில் அருகே லாரி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற லாரி மீது மோதியது. இதில், இடிபாடுகளில் சிக்கி புஷ்பராஜ், குரோமிக், சூசைராஜ் படுகாயம் அடைந்தனர். தொப்பூர் போலீசார், அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு குரோமிக் இறந்தார். இதுகுறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X