தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ரூ.1.89 கோடி முறைகேடு; 4 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ரூ.1.89 கோடி முறைகேடு; 4 பேர் கைது

Added : ஆக 08, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், 1.89 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 250 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் சுமார், 140 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு நடந்தது. இதில், சாப்பர்த்தி,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், 1.89 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 250 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் சுமார், 140 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு நடந்தது. இதில், சாப்பர்த்தி, மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண் சங்க முறைகேடுகளை கண்டறிய, துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இதில், சாப்பர்த்தி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 2014-2019ல், ஒரு கோடியே, 60 லட்சத்து, 17 ஆயிரத்து, 770 ரூபாயும், மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 2018-2019ல், 29 லட்சத்து, 72 ஆயிரத்து, 736 ரூபாயும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி சரக துணைப்பதிவாளர் ராதாகிருஷ்ணன், சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி.,யிடம் புகாரளித்தார். அதன்படி, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, முறைகேட்டில் ஈடுபட்ட சாப்பர்த்தி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க உதவி செயலாளர் குமார், சரக மேற்பார்வையாளர் ஜானகிராமன், சாப்பர்த்தி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர் அல்லிமுத்து மற்றும் மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்தார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கடந்த, 10 ஆண்டுகளில் தொடக்க வேளாண் சங்க முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என தெரிகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X