சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுப்பெண் சாவில் மர்மம்: கணவரை கைது செய்ய உறவினர்கள் மறியல்

Added : ஆக 08, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: மத்தூரில், புதுப்பெண் சாவில், அவரது கணவரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போச்சம்பள்ளி அடுத்த புளியாண்டப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன், 25, டிரைவர்; இவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், இதே பகுதியை சேர்ந்த அனிதா, 22, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த, 5ல் அதிகாலை அனிதா வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

போச்சம்பள்ளி: மத்தூரில், புதுப்பெண் சாவில், அவரது கணவரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போச்சம்பள்ளி அடுத்த புளியாண்டப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன், 25, டிரைவர்; இவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், இதே பகுதியை சேர்ந்த அனிதா, 22, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த, 5ல் அதிகாலை அனிதா வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து, மத்தூர் போலீசில் அனிதாவின் தந்தை அண்ணாச்சி, தன் மகளை காணவில்லை என புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணியளவில், அதே பகுதியில் செவத்தா கவுண்டர் என்பவரின் விவசாய கிணற்றில், அனிதா சடலமாக மிதந்துள்ளார். தகவலின்படி, மத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். திருமணமாகி, ஐந்து மாதத்தில் பெண் உயிரிழந்ததால், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் அனிதாவின் உறவினர்கள், 75க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, மத்தூர் போலீஸ் ஸ்டேஷன் முன், தர்மபுரி-திருப்பத்தூர் சாலையில், அனிதாவின் கணவர் ஹரிஹரனை கைது செய்ய வலியுறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலெக்சாண்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X